ரன் கொடுக்காத பெங்களூரு பவுலர்கள் – 155 ஓட்டங்களில் சுருண்டது ராஜஸ்தான்!

13 வது ஐ.பி.எல். போட்டியின் லீக் ஆட்டம் நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில் ராஜஸ்தான் – பெங்களூரு இடையேயான ஆட்டம் அபுதாபில் நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற ராஜஸ்தான் பேட்டிங்கை தேர்வு செய்தது.

 

அதன்படி, ஸ்மித், பட்லர் இணை அணிக்கு தொடக்கத்தைக் கொடுத்தது. 3வது ஓவரில் உடானா வீசிய பந்து ஸ்டம்பை தட்ட, ஸ்மித் நடையைக்கட்டினார். தொடர்ந்து பட்லரும், சஞ்சு சாம்சனும் வெளியேற ராபின் உத்தப்பாவும், மஹிபல் லூம்ரர் இணைந்து அணியின் ஸ்கோரை உயர்த்தப்போராடினர்.

இருப்பினும் 10 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 70 ரன்களை மட்டுமே சேர்ந்திருந்தது ராஜஸ்தான். பெரிய அளவில் அணியின் வீரர்கள் ரன்களை சேர்ப்பதில் தடுமாறியதால், 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 154 ரன்களை மட்டுமே சேர்த்திருந்தது அந்த அணி.இதில், ஆர்.சி.பி. தரப்பில், சாஹல் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளையும், உடானா 2 விக்கெட்டுகளையும், சைனி 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

Exit mobile version