ராஜஸ்தான் மாநிலத்தில் 72.7% வாக்குகள் பதிவு

ராஜஸ்தான் மாநிலத்தில் விறு விறுப்பாக நடைபெற்ற வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், சுமார் 72.7 % வாக்குகள் பதிவாகியுள்ளன. 200 தொகுதிகளை கொண்ட ராஜஸ்தான் சட்டப் பேரவைக்கான தேர்தல் நிறைவடைந்துள்ளது.

199 இடங்களுக்கு தேர்தல் நடைபெற்ற நிலையில், அண்மையில் வெளியான தகவலின் அடிப்படையில், 72.7 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. இங்கு ஆட்சியை பிடிக்க காங்கிரஸூம், ஆட்சியை தக்க வைக்க பா.ஜ.கவும் கடும் பிரச்சாரத்தில் ஈடுபட்டன.

யார் ஆட்சியை பிடிக்கிறார்கள் என்பது 11ஆம் தேதி நடைபெறும் வாக்கு எண்ணிக்கையின் போது தெரிய வரும். வாக்குப்பதிவு இயந்திரத்தில் குளறுபடி நடைபெறாமல் தடுக்க விழிப்புணடன் இருக்குமாறு காங்கிரஸ் தொண்டர்களுக்கு ராகுல்காந்தி உத்தரவிட்டுள்ளார்.

 

 

Exit mobile version