மன்னன் ராஜராஜ சோழனின் 1034-வது ஆண்டு சதய விழாவின் முதல் நாள் நிகழ்ச்சி தஞ்சை பெரிய கோயிலில் மங்கள இசையுடன் தொடங்கியது.
தஞ்சை பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின் சதய விழா ஒவ்வொரு ஆண்டும் பெரிய கோவிலில் தமிழக அரசு சார்பில் மிகவும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்தாண்டு 1034-வது ஆண்டு சதய விழா இன்று மங்கள இசையுடன் துவங்கியது. மாவட்ட ஆட்சியர் அணணாதுரை தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள், பொதுமக்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
அதன் பின், ராஜராஜசோழனின் பெருமையை உணர்த்தும் விதத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள புத்தக கண்காட்சிகள், பட்டிமன்றங்கள் நடைபெற்ற நிகழ்ச்சியை ஆட்சியர் அண்ணாதுரை துவக்கி வைத்தார். சதய விழாவில் முக்கிய நிகழ்வான அரசு சார்பில் மாலை இடும் நிகழ்ச்சி நாளை நடைபெறவுள்ளது. இந்த விழாவில் அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட பலர் ராஜராஜசோழன் சிலைக்கு மரியாதை செலுத்தவுள்ளதால் மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சதய விழாவை கொண்டாடும் வகையில் தஞ்சை மாவட்டம் முழுவதும் நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.