இந்திய புலனாய்வு பிரிவினர் தாக்குதல்கள் தொடர்பாக எச்சரிக்கைவிடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தலைநகர் கொழும்புவில் இருக்கும் ஜயவர்தனசபை கோட்டை மாநகர சபை பிரதான மண்டபத்தில், மே தினப் பொதுக் கூட்டத்தில் இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் ராஜபக்ச மற்றும் அவரது கட்சியினர் கலந்துகொண்டனர். அப்போது பேசிய ராஜபக்ச, தொழிலாளர்கள் குறித்து ரணில் தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி அக்கறை கொள்ளவில்லை என்றார். இந்திய புலனாய்வு பிரிவினர் தாக்குதல்கள் தொடர்பாக எச்சரிக்கைவிடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என்று தெரிவித்தார். தமது இயலாமையை மறைக்க பிறர் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதற்கான வழிகளை இலங்கை அரசாங்கம் தேடுவதாக ராஜபக்சே குறிப்பிட்டார்.