நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் வரையில் ராஜபக்ச பிரதமராக தொடரக் கூடாது என்று, இலங்கை உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் 122 பேர் தொடர்ந்த வழக்கில் இலங்கை உச்சநீதிமன்றம் இந்த இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது. எந்த அடிப்படையில் ராஜபக்ச பிரதமராக நியமிக்கப்பட்டார் என்று விளக்கமளிக்கவும் இலங்கை அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ராஜபக்சவின் அமைச்சரவை எந்த முடிவுகளும் எடுக்கக் கூடாது என உத்தரவிட்டுள்ள உச்ச நீதிமன்றம், டிசம்பர் 12 ஆம் தேதிக்குள் ராஜபக்ச தரப்பு விளக்கமளிக்கவும் ஆணையிட்டுள்ளது. அன்றைய தினமே வழக்கு மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.