குண்டுவெடிப்புக்கு பொறுப்பேற்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே பதவி விலக வேண்டுமென ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார். இலங்கையில் ஞாயிற்றுகிழமை நடந்த குண்டுவெடிப்பு சம்பவங்களில் 321 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் இலங்கை நாடாளுமன்றத்தில் இந்த விவகாரம் குறித்து உரையாற்றிய இலங்கை எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச, குறிப்பிட்ட மதத்தையோ அல்லது அந்த மதத்தை சேர்ந்த மக்களையோ இந்த குண்டுவெடிப்பில் தொடர்புபடுத்தி பேசுவது ஏற்கதக்கதல்ல என்று கூறினார்.
மேலும் பலரின் உயிரிழப்புக்கு காரணமான இந்த குண்டுவெடிப்புக்கு பொறுப்பேற்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவி விலக வேண்டுமெனவும் ராஜபக்ச வலியுறுத்தினார்.