கோவை பெரியகுளத்திற்கு மழைநீர் கொண்டு வரும் வாய்க்காலைத் தூர்வாரும் பணி

கோவை பெரியகுளத்திற்கு மழைநீர் கொண்டு வரும் வாய்க்காலைத் தூர்வாரும் பணியை மாவட்ட ஆட்சியர் ராஜமணி துவக்கி வைத்தார்.

தமிழ்நாட்டில் நீராதாரங்களை சீரமைக்க குடிமராமத்துப் பணிகள் செயல்படுத்தப்படுகின்றன. இதற்காக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுமார் 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளார். இந்நிலையில் கோவைக்கு 7 கோடியே 5 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, 45 குடிமாராமத்துப் பணிகள் செய்ய திட்டமிடப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக, கோவை பெரியகுளத்திற்கு நீர் தரும் கால்வாய்களை மூன்றரை கிலோமீட்டர் தூரம் தூர்வாரும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன. இந்தப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ராஜமணி பூமி பூஜைபோட்டு துவக்கி வைத்தார். அவர்களுடன் அதிகாரிகளும், சில தன்னார்வ அமைப்பினரும் கலந்துகொண்டனர்.

Exit mobile version