பவானி ஆற்றில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரை பயன்படுத்தி, ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஆயிரக்கணக்கான கிராமங்களுக்கு உள்ளாட்சி அமைப்புகள் முலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கன மழையின் காரணமாக, பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து,
அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து, தற்போது 92 அடியை எட்டியுள்ளது. மழை காரணமாக ஆற்றில் தண்ணீர் செந்நிறமாக ஓடுகிறது. இந்நிலையில், மண் கலந்து செந்நிறத்தில் குடிநீர் வருவதால், நீரை நன்கு காய்ச்சி வடிகட்டி குடிக்குமாறு, உள்ளாட்சி அமைப்புகள் மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
Discussion about this post