நீலகிரியில் மழையின் அளவு 45 சென்டி மீட்டராக பதிவு

நீலகிரி மாவட்டம் அவலாஞ்சி பகுதியில் தொடரும் கனமழை காரணமாக அங்கு சிக்கி தவித்த நீர்மின்நிலைய ஊழியர்கள் 4 பேரை முதற்கட்டமாக ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டுள்ளனர். அவலாஞ்சி, ஏமரால்ட்டு, கூடலூர் போன்ற பகுதிகளில் கனமழை காரணமாக மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக 35 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் மாநில பேரிடர் குழு, தேசிய பேரிடர் குழு, ஆயுத படை, தீயணைப்பு படை, ராணுவம் உள்ளிட்டவற்றை சேர்ந்த 500-க்கும் மேற்பட்டவர்கள் மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். கனமழையின் காரணமாக சாலைகள் துண்டிக்கப்பட்டதால் பலர் வெளியேற முடியாமல் சிக்கி தவித்து வருகின்றனர். விமான படைக்கு செந்தமான ஹெலிகாப்டர் மூலம் மீட்பு பணி தொடங்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் தண்ணீர் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. அவலாஞ்சி பகுதியில் சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Exit mobile version