குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வளிமண்டலத்தின் கீழ் அடுக்கில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுவதாலும், வெப்பச்சலனம் காரணமாகவும் அடுத்து வரும் 3 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல், திருவள்ளூர், வேலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.சென்னை மற்றும் அதன் புறநகர்ப்பகுதிகளில் மாலை மற்றும் இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.