அடுத்த 2 நாட்களுக்கு தமிழக உள்மாவட்டங்களில் மழை வாய்ப்பு

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தின் உள்மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்பச்சலனம் காரணமாக தமிழக வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தின் உள்மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் நிலவும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் கரூர், நாமக்கல், திருச்சி, திண்டுக்கல் போன்ற பகுதிகளில் அனல் காற்று வீசும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Exit mobile version