இரு தினங்களுக்கு தென் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு

அடுத்த இரு தினங்களுக்கு தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் சில பகுதிகளில் கடந்த சில தினங்களாக லேசான மற்றும் மிதமான மழை பெய்து வருகிறது. சென்னையிலும் சில இடங்களில் கடந்த இரு தினங்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், அடுத்த இரு தினங்களுக்கு தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் லேசான மற்றும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Exit mobile version