வடமாநிலங்களில் பெய்த மழையால் வெங்காயத்தின் விலை உயர்வு

வடமாநிலங்களில் பெய்து வரும் மழையின் காரணமாக திண்டுக்கலில் சின்ன வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. 

தமிழகத்தில் உள்ள பெரிய வெங்காய மார்க்கெட்டுகளில் திண்டுக்கல் வெங்காய மார்க்கெட்டும் ஒன்று. இங்கு நடைபெறும் வெங்காய சந்தைகளில் இருந்து உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்களுக்கும் வெங்காயம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த நிலையில், மகாராஷ்டிரா உள்ளிட்ட வடமாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், பயிரிடப்பட்ட வெங்காயம் சேதமடைந்துள்ளது. இதனால் திண்டுக்கலிற்கு வெங்காய வரத்து குறைந்துள்ளதால், வெங்காயத்தில் விலை உயர்ந்துள்ளது. ஒரு வாரத்திற்கு முன்பு ஒரு கிலோ 40ரூபாய்க்கு விற்ற வெங்காயத்தின் விலை 73 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. இதனை வெளி சந்தைகளில் விற்பனை செய்யும் வியாபாரிகள் கிலோ 80 ரூபாய்க்கு விற்பனை செய்வதால் மக்கள் கவலையடைந்துள்ளனர்.

Exit mobile version