ஈரோடு மாவட்டம் பர்கூர் வனப்பகுதியில் பெய்து வரும் கனமழையின் காரணமாக பாலாற்றில் நீர் நிரம்பி ஓடுவதால் தடுப்பணைகள் மற்றும் குட்டைகள் நிரம்பியுள்ளன
தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழையின் காரணமாக பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக வனப்பகுதியில் வறட்சி நிலவி வந்ததால் தண்ணீர் தேடி வன விலங்குகள் மலைப்பகுதிகளில் இருக்கும் கிராமங்களுக்குள் நுழைந்தன. தற்போது தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக வனப்பகுதியில் உள்ள தடுப்பணைகள் மற்றும் குட்டைகள் நிரம்பியுள்ளன. இதனால் வன விலங்குகள் ஊருக்குள் புகும் அபாயம் குறைந்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். வெள்ளப்பெருக்கினால் வரும் உபரி நீர் நேரடியாக பாலாற்றில் சென்று கலப்பது குறிப்பிடத்தக்கது.