குன்னூர்-கோத்தகிரி சுற்று வட்டார பகுதிகளில் பெய்த மழை காரணமாக தேயிலை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூர், கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் 1 மணி நேரத்திற்கு மேலாக பலத்த மழை பெய்தது. கட்டப்பெட்டு, பெட்டட்டி, பர்லியார், காட்டேரி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒரு மணிநேரத்திற்கு மேலாக பலத்த மழை பெய்தது. இந்த மழை காரணமாக தேயிலை மகசூல் அதிகரிக்கும் என்று விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.