தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் நிலவி வரும் மேல் அடுக்கு சுழற்சி மற்றும் தென் மேற்கு பருவமழையின் சாதக போக்கின் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக சென்னை உள்ளிட்ட 20 மாவட்டங்களில்மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், தமிழக கடற்கரை பகுதியில் இருந்து 400 கிலோ மீட்டர் வரை மீனவர்கள் மீன் பிடிக்க செல்லலாம் என்றும் அதை தாண்டி செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த 24மணி நேரத்தில் அதிகபட்சமாக பூந்தமல்லி, தரமணி, அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட இடங்களில் 5 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் சோழவரம், தாமரைப்பாக்கம் பகுதிகளில் 3 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. தொடர் மழை காரணமாக சென்னையில் நிலத்தடி நீர் மட்டம் 4 அடி வரை உயர்ந்துள்ளது.