கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்து வரும் நிலையில், மழை நீர் தேங்காமல் இருக்க மாநகராட்சி பணியாளர்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
கவுண்டம்பாளையம், வேலாண்டிபாளையம், இடையார்பாளையம், மருதமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்யத் தொடங்கியது. பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மேம்பாலத்தின் அடியில் நீர் தேங்காமல் இருக்க மாநகராட்சி பணியாளர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மாநகராட்சி அதிகாரிகள் பல்வேறு இடங்களில் மழை நீர் சேகரிப்பு தொட்டிகள் கட்டப்பட்டு உள்ளதா என ஆய்வு நடத்தி வருகின்றனர். மிதமான மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் விவசாயிகளும், மக்களும் மகிழ்ச்சியடைந்தனர்.