மழை நீரினை சேகரித்து வறட்சியை சமாளிக்கும் பொதுமக்கள்

மழை நீர் சேகரிப்பு திட்டத்தை முறையாக பயன்படுத்தி வருவதால் குடிநீர் தட்டுப்பாடு இல்லை என பல்வேறு தரப்பினரும் தெரிவித்து வருகின்றனர்.

நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிக்கும் விதமாக மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, கடந்த 2003ம் ஆண்டு மழை நீர் சேகரிப்பு திட்டத்தை கொண்டு வந்தார். இத்திட்டத்தின் படி வீடுகளில் மழைநீர் சேகரிப்பு தொட்டி இருப்பது கட்டாயமாக்கப்பட்டது. பருவ மழையை நம்பியுள்ள தமிழகத்தில் மழை நீர் சேகரிப்பு திட்டம் பெருமளவு கைகொடுத்து வருகிறது. வீட்டுக்கு வீடு மழை நீர் சேகரிப்பு தொட்டி அமைக்கப்பட்டதால் நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்தது. ஆனால் அடுத்து வந்த திமுக ஆட்சி இத்திட்டத்திற்கு பாராமுகம் காட்டியதால் நிலத்தடி நீர் சேகரிப்பு என்பது குறைந்து போனது. இருந்த போதும், இன்றும் பலர் மழை நீர் சேகரிப்பு தொட்டிகளை முறையாக பயன்படுத்தி தண்ணீர் தேவையை நிறைவேற்றி வருவது குறிப்பிடத்தக்கது.திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் பகுதியில் ராஜாமணி என்பவர் தனது 1500 சதுர அடி வீட்டில் மழைநீர் சேகரிப்பால் குடிநீர் தட்டுப்பாடு இல்லை என மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார்.

Exit mobile version