மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் நெல்கொள்முதல் நிலையத்தில் கூடாரம் இல்லாததல், நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்தன.
தரங்கம்பாடி தாலுக்காவில் நிகழாண்டு 20 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பில் சம்பா, தாளடி பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இந்த ஆண்டு முதல் ஆன்லைன் மூலம் பதிவு செய்த விவசாயிகள் மட்டுமே நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்ய முடியும் என அரசு அறிவித்துள்ள நிலையில்,
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை அடுக்கி வைத்து விவசாயிகள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் திடீரென பெய்த மழையில் நெல் மூட்டைகள் அனைத்தும் நனைந்துள்ளன.
இதையடுத்து தேங்கி நிற்கும் நீரை வடிய வைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டனர். திறந்தவெளி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு அரசு போதிய அளவில் தார்பாய்கள் வழங்கவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.