தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வெப்பச்சலனம் காரணமாக மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வெப்பசலனம் காரணமாக லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கன மழைக்கும் வாய்ப்புள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடனும், நகரின் ஒரு சில இடங்களில் லேசான மற்றும் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சிதம்பரத்தில் 8 சென்டி மீட்டர் மழையும், கேளம்பாக்கத்தில் 7 சென்டி மீட்டர் மழை அளவும் பதிவாகியுள்ளது.