ஆரணி அருகே மழை வேண்டி 'மழை மாரியம்மனுக்கு' வினோத பூஜை

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே மழை வேண்டி கிராம மக்கள் விநோத பூஜை நடத்தினர்.

ஆரணியை அடுத்த விளாங்குப்பத்தைச் சேர்ந்த கிராமத்தினர், அப்பகுதி மலை மீதிருக்கும் ஏழை மாரியம்மனுக்கு, களி உருண்டை, கருவாட்டுக்குழம்பு வைத்து வழிபாடு நடத்தினர். ஒன்பது சிறுவர்-சிறுமிகளை தரையில் படுக்க வைத்திருந்தனர். பின்னர் உணவு படையலை அவர்கள் மீது வைத்து பூஜை செய்தனர். அதுமட்டுமல்லாமல் ஏழை மாரியம்மன் முன்பு, பெண்கள் ஒப்பாரி வைத்து சிறப்பு பரிகார பூஜை செய்தனர். இப்படி செய்வதால் விரைவில் மழை பொழியும் என்பது கிராம மக்களின் நம்பிக்கையாக இருக்கிறது.

Exit mobile version