நெல்லையில் தீவிரமடையும் தென் மேற்கு பருவ மழை

செங்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தென் மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளதால், விவசாயிகள் நாற்று நடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

நெல்லை மாவட்டத்தில் ஜூன் மாதத்தில் கார் பருவ சாகுபடி நடவுப் பணிகளை விவசாயிகள் தொடங்குவர். ஆனால், இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை வழக்கத்தை விட குறைவாகவே பெய்ததால், விவசாயிகள் கவலையடைந்து வந்தனர். இந்நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து பலத்த மழை பெய்ததன் காரணமாக, குண்டாறு அணை, மேக்கரை அடவி நயினார் அணை ஆகியவை 100 அடியை தாண்டியது. இந்த தொடர் மழையின் காரணமாக செங்கோட்டை வட்டாரப் பகுதிகளில் உள்ள குளங்கள் வேகமாக நிரம்பி வருகினறன. இதைத் தொடர்ந்து விவசாயிகள் தங்களது நிலத்தில் உழவு செய்து, நாற்று பாவி தற்போது நெல் நாற்று நடும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Exit mobile version