வங்கக் கடல் பகுதியில் மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதால் 5 மாவட்டங்களில் அடுத்த இரு நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
ஆந்திராவை ஒட்டியுள்ள வங்கக் கடல் பகுதியில் மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதால் சென்னை, புதுச்சேரி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே இந்திய வானிலை மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், ஆகஸ்டு மற்றும் செப்டம்பர் மாதங்களில் நாடு முழுவதும் தென்மேற்கு பருவ மழை அதிகரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் தொடங்கிய தென்மேற்கு பருவமழை 9% குறைவாக பெய்துள்ள நிலையில், ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் சராசரி அளவை விட 8% மழை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்படுள்ளது. மேலும் வடக்கு வங்காள விரிகுடா பகுதியில் புயல் உருவாக வாய்ப்பு இருப்பதால் அடுத்த 2 வாரத்துக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.