தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் அடுத்த 2நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அடுத்த இரு நாட்களுக்கு வெப்பச்சலனம் மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக, மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் மாலையில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு அரபிக் கடல் பகுதிகளில் மணிக்கு 45முதல் 55கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக் கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Exit mobile version