பெரும்பாலான மாவட்டங்களில் பரவலாக மழை

தமிழ்நாட்டில் வெப்பச்சலனம் காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் திடீரென மழை பெய்தது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதுடன் சாலைகளில் தண்ணீர் தேங்கியது. பலத்த காற்றுடன் பெய்த மழையால், பல இடங்களில் மரங்கள் சாய்ந்து சாய்ந்ததுடன், மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

Exit mobile version