கடந்த 2 நாட்களாக திண்டுக்கல்லில் மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி

திண்டுக்கல்லில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக, பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திண்டுக்கல்லில் நேற்று காலையில் முதலே வெயில் வாட்டி எடுத்து வந்த நிலையில், மாலையில் வெயிலின் தாக்கம் படிப்படியாக குறைந்தது. சுமார் நான்கரை மணி அளவில் கருமேகங்கள் ஒன்று கூடி, சாரல் மழை பெய்யத் தொடங்கியது. சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பெய்த மழையின் காரணமாக, தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது. கடந்த 2 நாட்களாக திண்டுக்கல் மாவட்டத்தில் மழை பெய்து வருவது, அப்பகுதி விவசாயிகளையும் பொதுமக்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Exit mobile version