டெல்டா மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் அடுத்த இரு தினங்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .

இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ,வளிமண்டல கீழடுக்கில் ஏற்பட்டுள்ள லேசான சுழற்சி காரணமாக தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள்,தென் கடலோர மாவட்டங்களில் அடுத்த இரு தினங்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும் என்றும், சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படுமென்றும் ,அதிகப்பட்ச வெப்ப நிலை 31 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்த பட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியல் ஆக இருக்குமென்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .

Exit mobile version