தமிழகத்தின் உள்மாவட்டங்களில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், வெப்பச் சலனம் காரணமாக தென்மாவட்டங்கள் மற்றும் உள்மாவட்டங்களில் லேசானது முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகபட்சமாக 39 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை நிலவும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. குமரிக் கடல் பகுதி மற்றும் மன்னார் வளைகுடா பகுதியில் 35 முதல் 45 கிலோ மீட்டர் வரை பலத்த காற்று வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.