திண்டுக்கல் சுற்றுவட்டார பகுதிகளில் மழை:பொதுமக்கள் மகிழ்ச்சி

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்தில் அனைவரும் மழையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். மழை பெய்ய வேண்டும் என்று பல்வேறு கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. அதிமுக சார்பில் கோயிகள், தேவாலயங்கள், மசூதிகளில் மழை வேண்டி பிரார்த்தனைகள் நடைபெறுகிறது. இதற்கு நல்ல பலனும் கிடைத்து வருகிறது.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சுற்று வட்டாரத்தில் வத்திப்பட்டி, லிங்கா வாடி, காசம் பட்டி, வேம்பரளி, தேக்கம்பட்டி உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது. இந்த மழையால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். கடும் வெப்பம் நிலவிய நிலையில் மழை காரணமாக குளிர்ச்சி நிலவுகிறது. நத்தம் பகுதி விவசாயம் சார்ந்த பகுதி என்பதால் விவசாயிகளும் கால்நடை வளர்ப்பவர்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

Exit mobile version