மழையால் கைவிடப்பட்டது இந்தியா – இலங்கை இடையேயான முதல் 20 ஓவர் போட்டி

இந்தியா – இலங்கை இடையேயான முதல் இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி மழையால் கைவிடப்பட்டதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

மலிங்கா தலைமையிலான இலங்கை அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மூன்று 20 ஓவர் கிரிக்கெட் போட்டித் தொடரில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் போட்டி, அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெறுவதாக இருந்தது. டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சைத் தேர்வு செய்த நிலையில், மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. மழை நின்ற பிறகு மைதானத்தில் ஈரப்பதம் இருந்ததால் போட்டியைத் தொடங்க முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, முதல் இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆண்டின் முதல் போட்டி ஒரு பந்து கூட வீசாத நிலையில், கைவிடப்பட்டதால் கிரிக்கெட் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

Exit mobile version