ரயில்வே துறை தனியார் மயம் ஆக்கப்படாது என நாடாளுமன்றத்தில் மத்திய அரசு உறுதி பட கூறியுள்ளது.
மக்களவையில் பேசிய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல், ரயில்வே துறை தனியார் மயம் ஆக்கப்படும் என்ற கேள்விக்கே இடமில்லை என அறிவித்தார். ரயில்வே துறையில் வசதிகளை மேம்படுத்துவதற்காக மட்டுமே தனியாரின் பங்களிப்பு கோரப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார். தேசிய நலன் கருதி தனியார் பங்களிப்பு கோரப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளித்தார். ரயில்வேதுறை தனியாருக்கு தாரை வார்க்கப்படுவதாக திமுக, காங்கிரஸ் மற்றும் இன்னபிற உதிரி கட்சிகள் கூப்பாடு போட்டு வந்த நிலையில், மத்திய அரசு இந்த விளக்கத்தை கொடுத்துள்ளது.