கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில், ரயில்வே பணியாளர்கள் 151 கோடி ரூபாய் நிதியுதவி வழங்க உள்ளதாக மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பு பணிகளுக்காக அனைத்து மாநில அரசு ஊழியர்களும் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். அதே போல் மத்திய அரசு ஊழியர்களும் நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர். இந்த நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில், பிரதமரின் தேசிய நிவாரண நிதிக்கு, 13 லட்சம் ரயில்வே ஊழியர்கள் தங்களின் ஒருநாள் ஊதியத்தை நிதியாக வழங்க உள்ளதாக ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். அதன்படி, பிரதமரின் தேசிய நிவாரண நிதிக்கு 151 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்பட இருக்கிறது. அதே போல், துணை ராணுவப்படையினர் தங்களது ஒருநாள் ஊதியமான 116 கோடி ரூபாய்க்கான காசோலையை உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் வழங்கினர்.