பாம்பன் பாலத்தில் இரும்பு கர்டர்கள் மாற்றும் பணி தொடங்கி நடைபெற்று வருவதால் ஜூலை 30ஆம் தேதி வரை ரயில் போக்குவரத்து நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாம்பன் கடல் பாலம் கட்டமைக்கப்பட்டு 105 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், கடந்த 4 வருடங்களில் இரும்பு கர்டர்கள் படிப்படியாக மாற்றப்பட்டு வருகின்றன. மொத்தமுள்ள 144 கார்டர்களில், 28கர்டர்கள் 2015 ஆம் ஆண்டும், 16 கர்டர்கள் 2016 லும், 32 கர்டர்கள் 2017 ஆம் ஆண்டும் 27 கர்டர்கள் 2018 ஆம் ஆண்டும் மாற்றப்பட்டன. இந்நிலையில் 5வது கட்டமாக சுமார் 8 கோடி ரூபாய் மதிப்பில் 29 கார்டர்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கர்டர்கள் அமைக்கும் பணி காரணமாக ஜூலை 30ம் தேதி வரை மதுரை ராமேஸ்வரம் பயணிகள் ரயில் மண்டபத்தோடு நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.