ரயில்வே நடைமேடை கட்டணம் ரூ.10-ல் இருந்து ரூ.50 ஆக உயர்வு

கொரோனா பாதிப்பு காரணமாக, ரயில் நிலையங்களில் கூட்டம் கூடுவதை தவிர்ப்பதற்காக, ரயில்வே நடைமேடை கட்டணம் 10 ரூபாயில் இருந்து 50 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

கொரோனா நோய்த்தொற்று காரணமாக, ரயில்வே சார்பில் இயக்கப்படும் ரயில்களில் உள்ள ஏசி பெட்டிகளில் போர்வை வழங்குவது நிறுத்திவைக்கப்படுவதாக அண்மையில் அறிவிப்பு வெளியானது. மறு உத்தரவு வரும் வரை இந்த நடைமுறை தொடரும் என அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில், கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாக, மேற்கு ரயில்வேக்கு உட்பட்ட மும்பை, வதோதரா, ராஜ்காட் உள்ளிட்ட 6 மண்டலங்களில் உள்ள 250 ரயில் நிலையங்களில் ரயில்வே நடைமேடை கட்டணம் 50 ரூபாயாக உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று தெற்கு ரயில்வேயில், சென்னை மண்டலத்தில் மட்டும் நடைமேடைக் கட்டணம் 50 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மற்ற பகுதிகளிலும், இந்த கட்டண உயர்வை அமல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக ரயில்வே அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version