குடியுரிமைச் சட்ட எதிர்ப்புப் போராட்டத்தில் ரயில்வே சொத்துக்கள் சேதம்

குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தில் ரயில்வே சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டதால் 88 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டதில் இருந்தே அசாம், மணிப்பூர், திரிபுரா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களிலும், மேற்குவங்கத்திலும் அதை எதிர்த்துப் போராட்டம் நடைபெற்றது.

மசோதா இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட பின் போராட்டம் தீவிரமடைந்தது. குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்துப் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற போராட்டத்தின்போது வன்முறையாளர்கள் ரயில்வே சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்தனர்.

இதனால் கொல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்ட கிழக்கத்திய ரயில்வேக்கு 72 கோடி ரூபாயும், தென்கிழக்கு ரயில்வேக்கு 13 கோடி ரூபாயும், வடகிழக்கு எல்லைப்புற ரயில்வேக்கு 3 கோடி ரூபாயும் இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version