மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மீட்ட இரயில்வே காவல்துறை அதிகாரிகள்

ரயில் நிலையங்களில் சுற்றித்திரிந்த மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் ஆதரவற்றவர்களை மீட்டு பல்வேறு காப்பகங்களில் ஒப்படைத்த ரயில்வே காவல் துறையினருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட இரயில்வே காவல்துறை இயக்குநர் சைலேந்திரபாபு, தமிழகம் முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் ஆதரவற்ற நிலையில் சுற்றிதிரிந்தவர்களை மீட்க உத்தரவிட்டார். அதன்படி, 46 இரயில்வே காவல் நிலைய பகுதிகளில் சுற்றித்திரிந்த ஆதரவற்றவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என 11 பெண்கள் உட்பட 96 பேர் மீட்கப்பட்டனர். இதனையடுத்து, பல்வேறு தனியார் தொண்டு நிறுவனங்கள் நடத்தி வரும் சேவை இல்லங்கள் மற்றும் காப்பகங்களில் அவர்கள் சேர்க்கப்பட்டனர். நல்ல நிலையில் இருந்தவர்களை அவர்களது உறவினர்களிடம் சேர்க்கும் முயற்சியிலும் இரயில்வே காவல் துறையினர் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கு பொதுமக்கள் பலர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Exit mobile version