ரயில்வே அதிகாரி வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை

சேலத்தில் ரயில்வே அதிகாரி வீட்டின் பூட்டை உடைத்து 42 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

சூரமங்கலம் அருகே முல்லை நகரில் வசித்து வரும் பசுபதி தனது மகளின் திருமண அழைப்பிதழ் வைப்பதற்காக சென்னை வந்துள்ளார்.  வீடு திரும்பிய அவர் கதவை உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் திருமணத்திற்காக வைக்கப்பட்டிருந்த 42 சவரன் தங்க நகைகள், 15 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக சூரமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Exit mobile version