ஈஃபிள் டவரை விட உயரமான ரயில்வே பாலம் காஷ்மீரில் கட்டப்பட்டு வருகிறது.
காஷ்மீர் மாநிலம் ரியாசி மாவட்டத்தில் உள்ள பக்கல் மற்றும் கௌரி ஊர்களை இணைக்கும் வகையில் ரயில்வே பாலம் கட்டப்பட்டு வருகிறது. செனாப் நதியின் குறுக்கே ஆயிரத்து 178 அடி உயரத்தில் கட்டப்பட்டு வரும் இந்த பாலத்தின் நீளம் 1 புள்ளி 3 கிலோ மீட்டர் ஆகும்.
தரையில் இருந்து 324 மீட்டர் உயரத்தில் ஈஃபிள் டவர் உள்ள நிலையில், அதைவிட 35 அடி உயரமாக தரையில் இருந்து 359 மீட்டர் உயரத்திற்கு இந்த பாலம் கட்டப்பட்டு வருகிறது.
இந்த பணிகள் அனைத்தும் முழுமையாக முடிந்து அடுத்த ஆண்டு திறக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.