நாகர்கோவிலில் போலி ஐ.டிக்கள் மூலம் ரயில் டிக்கெட் விற்பனை செய்தவரை ரயல்வே பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், போலி ஐ.டிக்கள் மூலமாக, அதிகளவில் ஆன் லைன் டிக்கெட் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது. அதனடிப்படையில், ரயில்வே போலீசார் ரகசியமாக கண்காணித்து வந்தனர். இந்நிலையில்,
நாகர்கோவிலை சேர்ந்த பிரகாஷ் என்பவர், 15 க்கும் மேற்பட்ட போலி ஐ.டிக்கள் உருவாக்கி, ரயில் டிக்கட் விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைதொடர்ந்து, அவரை கைது செய்த ரயில்வே பாதுகாப்பு போலீசார், 49 ஆயிரம் ரூபாய் மற்றும் டிக்கெட் பதிவு செய்ய பயன்படுத்தப்பட்ட கணிணி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.