பயங்கரவாத முகாம்கள் தாக்குதல் நடத்தி தகர்க்கப்பட்ட நிலையில், காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள பிரிவினைவாத தலைவர்கள் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
தேசிய புலனாய்வு அமைப்பினர், உள்ளூர் காவல்துறை மற்றும் துணை ராணுவப் படையினரின் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மிர்வாய்ஸ் உமர் பரூக், யாசின் மாலிக் ஆகியோரின் வீடுகள், அலுவலகம் உட்பட 9 இடங்களில் சோதனை நடக்கிறது. பிரிவினைவாதிகள் பாகிஸ்தானிடமிருந்து ஹவாலா முறையில் பணம் பெற்று வருவதாக தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது.