காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் தேர்தல் வாக்குறுதி உண்மையாகவே மக்கள் நலனுக்கானதா என விமர்சித்து தனியார் வளைதள ஊடகம் கட்டுரை எழுதியுள்ளது. வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு வருடாந்திர நிதி வழங்கப்படும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாக்குறுதி அளித்தார். இதன் திட்ட வரைவில் 20 சதவிகிதம் மக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆனால், கடந்த 2012 ஆம் ஆண்டு ரங்கராஜன் கமிட்டியின் அறிக்கையில் 29 புள்ளி 5 சதவீதம் மக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதிலிருந்தே இந்த திட்டம் சாத்தியமா என்பது கேள்விக்குறி ஆனதாக எழுதப்பட்டுள்ளது. இந்தியாவின் பொருளாதாரம் முறைபடுத்தப்பட்டது மற்றும் முறைபடுத்தப்படாதது என இருவகைகளில் நடந்து வருகிறது. அதன்படி 90 சதவீதம் மக்கள் முறைபடுத்தப்படாத பொருளாதரத்தில் பணிபுரிந்து வருகின்றனர். அப்படி இருக்கையில் அவர்களது வருமானத்தை கணக்கிடுவது சாத்தியமில்லாத ஒன்று என்றும் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறுபவர்கள் யார் என்பது கேள்வி குறியாகும் எனவும் அந்த கட்டுரையில் விமர்சிக்கப்பட்டுள்ளது.