ராகுல் காந்தியின் தொகுதியான அமேதிக்கு பிரதமர் மோடி பயணம்

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் தொகுதியான அமேதியில் இன்று நடைபெறும் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமராக பதவியேற்ற பிறகு முதல்முறையாக மோடி பங்கேற்க உள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலத்தின் அமேதி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட கோர்பா முன்ஷிகஞ்ச்சில் இன்று நடைபெற உள்ள அரசு விழாவில் கலந்து கொள்ளும் பிரதமர் மோடி, ஆயுத தளவாட தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டுகிறார். இதைத்தொடர்ந்து, கெளரிகஞ்ச் அருகே கோஹார் பகுதியில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகிறார். பிரதமர் வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தல் வெற்றிக்கு பின்னர் பிரதமராக பதவியேற்ற மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் சொந்த தொகுதியான அமேதிக்கு முதன்முறையாக இன்று செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version