இடைக்கால பட்ஜெட் குறித்து ராகுல் காந்தி கடும் விமர்சனம்

மோடியின் ஐந்தாண்டு கால ஆட்சியில் விவசாயிகள் வாழ்க்கை சிதைக்கப்பட்டு விட்டதாக, இடைக்கால பட்ஜெட் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இடைக்கால பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்தார். அப்போது, மத்திய அரசு ஆண்டுக்கு 6 ஆயிரம் விவசாயிகளுக்கு அளிக்கும் தொகையை ஆண்டுக்குப் பிரித்துப் பார்த்தால், விவசாயி ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு 16 ரூபாய் 44 காசுகள் தான் வருகிறது என்றார். பணமதிப்பிழப்பு அமல்படுத்தியது, வேளாண்மையில் எப்போதுமில்லாத சிக்கலை ஏற்படுத்தியது, ஜிஎஸ்டியை மோசமாக அமல்படுத்தியது ஆகிய குற்றங்களைச் செய்தமைக்காக விவசாயிகளுக்கு 500 ரூபாய் வழங்கி இருப்பது மிகச்சிறிய அளவு என்று விமர்சித்தார்.

இதற்கிடையில் மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் முழுவதும் தேர்தலை கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார். விவசாயிகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு அளித்துள்ள சலுகைகள் தேர்தலுக்காக அறிவிக்கப்பட்டது என்பது வெளிப்படையாக தெரிகிறது என்றும் விமர்சித்துள்ளார்.

Exit mobile version