ராகுல் காந்தியின் இரட்டை குடியுரிமை வழக்கு : உச்சநீதிமன்றம் தள்ளுபடி

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் இரட்டை குடியுரிமை குறித்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இந்தியாவில் மட்டுமின்றி இங்கிலாந்திலும் குடியுரிமை பெற்றுள்ளதாகவும் அதனால், மக்களவை தேர்தலில் அவரது வேட்புமனுக்களை நிராகரிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில், இந்த வழக்கில் எந்த முகாந்திரமும் இல்லை எனக் கூறி வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்துள்ளனர். காகிதங்களை அடிப்படையாக கொண்டு ராகுல் இங்கிலாந்தின் குடியுரிமை பெற்றவர் என்பதை ஏற்க முடியாது என்று தெரிவித்த நீதிபதிகள், அவர் இந்தியர்தான் என திட்டவட்டமாக தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்தனர்.

Exit mobile version