அமேதி தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ராகுல் காந்தி

அமேதி நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று முதல் இருதினங்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதற்கான ஆயத்த வேலைகளில் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.இதற்கிடையே, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் தங்களது மக்களவை தொகுதிகளுக்கு ஜனவரி 23, 24-ம் தேதிகளில் சுற்றுப்பயணம் செய்ய உள்ளதாக அக்கட்சியின் தலைமை அறிவித்திருந்தது. இந்நிலையில் திடீரென தவிர்க்க முடியாத காரணத்தால் சோனியா காந்தியின் ரேபரேலி தொகுதி பயணம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், திட்டமிட்டபடி ராகுல் காந்தி தனது அமேதி தொகுதியில் இன்று முதல் சுற்றுப்பயணம் மேற்கொள்ளுகிறார்.

Exit mobile version