ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று சந்திப்பு?

ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை இன்று சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிராக போர்கொடி தூக்கியுள்ளார். இதையடுத்து பாஜகவுக்கு எதிராக அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், லோக்தந்திரிக் ஜனதா தள தலைவர் சரத் யாதவ், மற்றும் பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதியை சந்தித்து பேசினார்.

இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு பாஜகவுக்கு எதிரான கூட்டணி அமைக்கும் திட்டம் தொடர்பாக இந்த சந்திப்பு அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மதசார்பற்ற கட்சிகளை திரட்ட முடிவு செய்துள்ள சந்திரபாபு நாயுடு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை இன்று சந்திப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

 

Exit mobile version