காலி இருக்கைகளுக்கு மத்தியில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பரப்புரை ஆற்றிய பரிதாப சம்பவம், கிருஷ்ணகிரியில் அரங்கேறியது.
கிருஷ்ணகிரியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியை சேர்ந்த வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி பிரசாரம் மேற்கொண்டார். இந்தக் கூட்டம் காலை 10 மணிக்கு தொடங்கும் என்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், இரண்டு மணி நேரம் தாமதமாக பிற்பகல் 12 மணி அளவில் ராகுல் காந்தி வந்து சேர்ந்தார். ஏற்கனவே குறைவான நபர்களே கூட்டத்திற்கு வந்திருந்த நிலையில், வெயிலின் காரணமாக பலர் கூட்டம் தொடங்குவதற்கு முன்னரே சென்று விட்டனர். இதனால் காலியான இருக்கைகளுக்கு மத்தியில் பரப்புரையை மேற்கொண்ட ராகுல் காந்தி, சுருக்கமாக தனது உரையை முடித்துக் கொண்டு கிளம்பினார்.