தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக ராகுல் டிராவிட் நியமனம்

தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட்டை பிசிசிஐ நியமித்துள்ளது.

பெங்களூரில் செயல்பட்டு வரும் இந்திய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்த டாக்டர். கின்ஜல் சுரத்வாலாவின் பதவி காலம் முடிவடைய உள்ள நிலையில், புதிய தலைவராக முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும் முன்னாள் விக்கெட் கீப்பருமான ராகுல் டிராவிட்டை இந்திய கிரிக்கெட் வாரியம் நியமித்துள்ளது. இது தொடர்பாக பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் கிரிக்கெட் அணியின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றி இருப்பதாகவும், இந்திய ஏ அணி, இந்திய 19 வயதுக்குட்பட்ட அணி, உள்பட 23 அணிகளுக்கு தலைவராக செயல்படுவார் என்றும், வீரகளை தயார் செய்வதிலும், ஊக்கப்படுத்தும் பணிகளையும் டிராவிட் மேற்கொள்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version