மிதாலி ராஜ் வாழ்க்கை வரலாறுப் படத்தை இயக்குவதில் இருந்து, ராகுல் தொலாகியா ((Rahul Dholakia)) விலகல்

கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ் வாழ்க்கை வரலாறுப் படத்தை இயக்குவதில் இருந்து, ராகுல் தொலாகியா ((Rahul Dholakia)) விலகியுள்ளார்.

இந்திய மகளிர் கிரிக்கெட்டில் பல சாதனைகளை படைத்துள்ள மிதாலி ராஜ், 200 ஒருநாள் போட்டியில் ஆடி இந்திய அணிக்கு பெருமை சேர்த்துள்ளார்.

கடந்த 2 வருடங்களுக்கு முன்னர் மிதாலி ராஜின் வாழ்க்கை வரலாற்றுப் படம் குறித்து அறிவிப்பு வெளியானது.

‘சபாஷ் மித்து’ ((Shabaash Mithu)) என பெயரிடப்பட்ட அந்தப் படத்தில், மிதாலி ராஜ் பாத்திரத்தில் டாப்சி நடிக்க, ராகுல் தொலாகியா இயக்குவதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், தற்போது ராகுல் தொலாகியாவுக்கு பதிலாக, ஸ்ரீஜித் முகர்ஜி ((Srijit Mukherji)) இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

 

Exit mobile version