உங்கள் ராசிக்கு என்ன நடக்கப்போகிறது? "ராகு – கேது" பெயர்ச்சி ராசி பலன்கள்

மேஷம்

கோயில் பூஜை பரிகாரம் செய்ய வேண்டி வரும் – எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும் – 3 இல் ராகு புதிய முயற்சிகளை மேற்கொள்ள வைக்கும் – தடைபட்ட காரியங்கள் ஜெயமாக முடியும் – வீடு,நிலம்,வாகன யோகம் அமையும் – புத்திர பாக்கியம் – தடைப்பட்ட திருமணம் கைகூடும் – தந்தை வழி சொத்துக்கள் கிடைக்கும் – சுபகாரிய நிகழ்ச்சிகள் நடைபெறும்

ரிஷபம்

ராகு 2ம் இடத்திற்கும், 8ம் இடத்திற்கு கேதுவும் வந்திருக்கிறார்கள் 

பூமி வாகனம் சம்பந்தபட்ட வகையில் சுப விரையம் வரலாம் – கேது 8ல் இருப்பதால் தொட்டது துலங்கும் – வழக்கில் கொஞ்சம் கவனம் தேவை – தேவைகேற்ப தனவரவு, நண்பர்கள் உதவி கிடைக்கும் – பணத்தை சேமிக்க கொஞ்சம் திணறவேண்டி வரும் – கேது பகவான் போட்டி பொறாமை எதிரி எல்லாவற்றையும் அழிப்பார்

மிதுனம்

இது வரை 2ல் ராகு 8ல் கேது சஞ்சரித்தனர். இப்பொழுது ஜென்ம ராசியில் ராகுவும், 7 இல் கேதுவும் வந்திருக்கிறார்கள் 

நீண்ட நாள் பிரிந்திருந்த குடும்பம் ஒன்று சேரும் – தொழிலில் முன்னேற்றம் வரும். சிலருக்கு தொழில் மாற்றம்,இடமாற்றம் வரலாம் – உயர்கல்வியும் படிக்கும் வாய்ப்பு வரும் – சனியோடு கேது 7லும் இருப்பதால் தவிர்க்க முடியாத செலவும் அதனால் கடன் வாங்கும் கட்டாயமும் வரலாம்

கடகம்
இது வரை ராகு கேது ஜென்ம ராசியிலும்,7ம் பாவத்திலும் சஞ்சாரம் செய்தார்கள்.இப்பொழுது இடம் மாறி 12மிடத்தில் ராகுவும் 6ம் இடத்தில் கேதுவும் வந்திருக்கிறார்கள் 

திருமணம், கிரக பிரவேசம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும் – வெளிநாட்டு பயணம்,தொழில் அமையும் வாய்ப்பை – பழைய கடன்கள் அடையும் – குடும்பத்தில் அமைதி ஆனந்தம் கிடைக்கும்

சிம்மம்

பாகப் பிரிவினை, சொத்து வழக்குகள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக முடியும் – தடைப்பட்ட திருமணங்கள் நடக்கும் – கடன் சுமை குறையும் – புதிய முயற்சிகள் கை கூடும் – 5ல் கேது இருப்பதால் குலதெய்வ பிரார்த்தனை செய்யுங்கள்

கன்னி
ராகு 10லும் கேது 4ஆம் வீட்டிலும் வந்து அமர்ந்திருக்கின்றனர் – தொழில், கீர்த்தி, செல்வாக்கு கூடும் – வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமையும் – கணவன் மனைவி ஓற்றுமை ஒங்கும் – கடன் சுமை குறையும்

துலாம்

குடும்பத்தில் சுபகாரியம் புதுமுயற்சி,திருமணம்,புத்திர பாக்கியம் போன்ற சுபமங்கள நிகழ்ச்சிகள் நடக்கும் – வெளிநாட்டு பயணங்கள் அனுகூலம் ஆதாயத்தை தரும் – இடையூறு நீங்கும் – மறைமுக எதிர்ப்புகள் விலகும் – காசு,பணம் சம்பாத்தியம் சேமிப்பை கொடுப்பார்.

விருச்சிகம்

எதிர்ப்பாராத பணம் பொன் பொருள் சேர்க்கை வீடு வாசல் போன்ற வசதிகளை தருவார் – திருமணம் சுபகாரியம் நடக்கும் – கோர்ட் வம்பு வழக்குகள் சாதகமாகும் – இடமாற்றம்,ஊர்மாற்றம் வரலாம் – வருமானம் சேமிப்பு உயரும் – சொல்லும் செயலும் வெற்றி பெறும்

தனுசு

ராசியில் கேது கௌரவம் புகழ் கீர்த்தி அந்தஸ்து தரும் – வருமானம் திருப்தி தரும் – புதிய நட்பு அமையும் – கூட்டு தொழில் மேன்மை தரும்

மகரம்

வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை அமையும் – பதவி உயர்வு பெற்று வருமானம் கூடும் – புது முயற்சிகள் கை கூடும் – சேமிப்புகள் உயரும் – வண்டி வாகன மாற்றம் – வீடு மாற்றமும் சொந்த வீடு குடி போகும் சந்தர்ப்பங்கள் உருவாகும் – திருமணம் காரியம் சாதகமாக முடியும் – வெளிநாட்டு தொடர்புடைய உத்யோகம் கிட்டும்

கும்பம்

கேது 11ல் இருப்பதால் தொட்டது துலங்கும் – தேவையற்ற செலவுகள் குறையும் – இதுவரை தடைபட்ட காரியம் முடியம் – முன்னோர் வகையில் உள்ள தோஷம் நீங்கும் – திருமணம் சுபகாரியம் நடக்கும் – செய்யும் முயற்சிகள் வெற்றி பெறும்

மீனம்

பூமி வீடு வாகனம் வாங்கும் யோகத்தை கொடுப்பார் – வெளிநாட்டு தொடர்புடைய தொழில்கள்,வருமானம் அனுகூலம் கொடுக்கும் – தொட்டது துலங்கும் நல்லவர்களின் ஆதரவு கிடைக்கும் – பொன் பொருள் சேர்க்கை உண்டாகும் – தொழிலில் இடமாற்றம் உத்தியோக உயர்வை கொடுக்கும் – இந்த ராகு கேது பெயர்ச்சி உங்களுக்கு எதிர்பாராத திருப்பத்தை தரும்

Exit mobile version